கிராம சேவகர் மீதான தாக்குதலைக் கண்டித்து போராட்டம்

கிராம சேவகர் மீதான தாக்குதலைக் கண்டித்து போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட காணி விடயம் ஒன்றினை பார்வையிட சென்ற கிராம சேவகர் தாக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று (05) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலக முன்றலில் மதியம் ஒன்று கூடிய கிராம சேவகர்கள், கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்ததுடன், இறுதியாக பிரதேச செயலாளர் ஜெ.அதிசயராஜிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதன்போது 'கிராம உத்தியோகத்தரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்து', 'எமது பிரிவின் கடமையை எம்மை செய்யவிடு', 'அரச கடமையினை செய்கின்ற கிராம சேவகரை தாக்கியதை வன்மையாக கண்டிக்கின்றோம்', 'அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு செய்யாதே' போன்ற வாசகங்கங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 GS_Kalmunai02.jpg

GS_Kalmunai01.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image