ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான அஞ்சல் சேவை வரிக்கொள்கை திருத்தம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான அஞ்சல் சேவை வரிக்கொள்கை திருத்தம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும், கடிதம் தவிர்ந்த ஏனைய அனைத்து அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கை எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் திருத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிக்கொள்கை திருத்தமானது, பெறுமதிசேர் வரி மற்றும் ஏனைய தீர்வை வரிக்கொள்கைகளுக்கு உட்பட்டதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 150 யூரோவுக்கு குறைந்த பெறுமதியுடைய அனைத்து அஞ்சல் பொருட்களுக்கும், அனுப்புனர் நேரடியாக குறித்த வரியை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணமுடிவு நாட்டிற்கு செலுத்த வேண்டும் என்றும் அஞ்சல்மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EU.jpg

EU01.jpg

 

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image