நாட்டில் நேற்றிரவு 10 மணிக்கு அமுலான இந்த நடமாட்டக் கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரும் என பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து, தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய செயற்படுமாறும் அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்றவர்கள் மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியும். அவர்கள் சேவைக்கு அழைக்கப்பட்டிருந்தால் மாத்திரம் வீதியில் பயணிக்க முடியும். ஏனைய அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும்.
பொலிஸாரின் நடமாடும் மற்றும் மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
எவராவது ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்றபட்டால், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்ல முடியும்.
மாகாணங்களுக்கு இடையில் நடமாட அனுமதி இல்லை என பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.