அதிபர் - ஆசிரியர்களுக்கு அவசியமான தடுப்பூசிகள் எவ்வளவு தெரியுமா?

அதிபர் - ஆசிரியர்களுக்கு அவசியமான தடுப்பூசிகள் எவ்வளவு தெரியுமா?

பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள், அதிபர்கள், உப அதிபர்கள் உள்ளிட்ட நிர்வாகத் துறையினருக்கும், கல்விசாரா ஊழியர்களுக்கும் செலுத்துவதற்காக, 279,020 கொரோனா தடுப்பூசிகள் அவசியமாகவுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள திறப்பதற்கு தேவையான பின்னணி தொடர்பில், கல்வி அமைச்சருக்கும், விசேட வைத்தியர்களுக்கும் இடையில் கல்வி அமைச்சில் நேற்று (16) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சர்,

கொவிட்-19 பரவல் காரணமாக துரதிஷ்டவசமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இயன்றளவு விரைவாக நாட்டில் சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டதன் பின்னர், சுகாதாரத்துறையினரிள் பரிந்துரைக்கு அமைய, பாடசாலைகளை மீளத் திறக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு அதிக காலம் அவசியமாகும். விசேட வைத்திய நிபுணர்களின்
ஆலோசனைக்கு அமையவே, இதற்கான வேலைத்திட்டத்தை திட்டமிடவேண்டும். இதற்கான முதல் நடவடிக்கை தடுப்பூசி செலுத்தலாகும்.

பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள், அதிபர்கள், உப அதிபர்கள் உள்ளிட்ட நிர்வாகத் துறையினருக்கு செலுத்துவதற்காக சுமார் 249,613 தடுப்பூசிகள் அவசியமாகும். அத்துடன், கல்விசார ஊழியர்கள் 29,407 பேர் உள்ளனர்.

இதன்படி, மொத்தமாக 279,020 கொரோனா தடுப்பூசிகள் அவசியமாகவுள்ளது.

இதன்மூலம், ஆசிரியர்களின் தைரியத்தை அதிகரிக்க முடிவதுடன், பிள்ளைகளை பர்டசாலைக்கு அனுப்புவது தொடர்பில் பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெறமுடியும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image