நாட்டின் அனைத்து மாகாண சபை வைத்தியசாலைகளிலும் இன்று காலை 8 மணி முதல் 4 மணிநேர தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பதாக அகில இலங்கை சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியாலைகளில் பணியாற்றும் கனிஷ்ட பணிக்குழாமினர் மாத்திரம் இதில் பங்கேற்கவுள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த குருகே தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தப்படாமை உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவையாளர் சங்க பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.