இலங்கை பொலிஸ் சேவையில், பயிலுனர், கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிலுனர் மகளிர் கான்ஸ்டபிள்கள் முதலான பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சையில் தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த எழுத்துப் பரீட்சை 6 மத்திய நிலையங்களில், எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி முற்பகல் 8.30 முதல் 10.30 வரை இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு 12 ஹமீட் அல் ஹூவேனி மகா வித்தியாலயம், கொழும்பு 13 விவேகானந்தா மகா வித்தியாலயம், கண்டி - வித்யார்த்த வித்தியாலயம், அநுராதபுரம் - நிவத்தக சேதிய வித்தியாலயம், காலி - புனித அலோசியஸ் மகா வித்தியாலயம் மற்றும் அம்பாறை - டீ.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயம் ஆகிய பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெறவுள்ளது.
இதற்கான அனுமதி அட்டை விண்ணப்பதாரர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த அனுமதி அட்டை பரீட்சை தினத்திற்கு முன்னர் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள், 011 5811 921 அல்லது 011 5811 925 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.