ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு: ஆட்சேர்ப்பு தொடர்பில் அரசின் அறிவித்தல்
ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பில் எஞ்சியவர்கள் கட்டம் கட்டமாக ஆட்சேர்க்கப்படுவர் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பில் இதுவரை ஆட்சேர்க்கப்பட்ட 38,000 பேரில் நேர்முகத்தேர்வுக்கு சென்று பட்டியலில் இல்லாதவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன நாடாளுமன்றில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, சபாநாயகர் அவர்களே இது முழுமையான தவறான கருத்தாகும் என்றார்.
அவ்வாறு தொழில் வாய்ப்பில் தொழில் வழங்கப்படவில்லை. ஆனால் நீங்கள் கூறுவது போல எவராவது ஒருவர் அந்த பெயர் பட்டியலில் ஆட்சேர்க்கப்பட்டிருக்காவிட்டா ல் அந்த பட்டியலை எங்களுக்கு வழங்குங்கள்.
இதுவரையில் 38,000 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. ஒரு இலட்சம் பேர் வரையில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
அவர்கள் கட்டம் கட்டமாக ஆட்சேர்க்கப்படுகின்றன. அவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட வேண்டும். தொழிற்பயிற்சி வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் என்பதற்கமையவே ஆட்சேர்க்கப்படுகின்றனர்.
38,000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்கள் கட்டம் கட்டமாக ஆட்சேர்க்கப்படுவர். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமாயின் அந்தப் பெயர்ப் பட்டியலை எனக்கு அனுப்புங்கள். அதற்கான பதிலை நான் உங்களுக்கு வழங்குகிறேன் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்