நேற்று தொற்றுதியானவர்களில் அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

நேற்று தொற்றுதியானவர்களில் அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 237 பேரில் அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வெளிநாடுகளில் இருந்துவந்த 78 பேருக்கு நேற்று தொற்றுறதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில், 23 பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில், 21 பேருக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில், 20 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறதியாகியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 18 பேருக்கும், பொலனறுவை மாவட்டத்தில் 13 பேருக்கும் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில், தலா 9 பேருக்கும் தொற்றுறுதியானதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறதியானோரின் மொத்த எண்ணிக்கை, 96 ஆயிரத்து 186 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 303 பேர் நேற்று குணமடைந்ததாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை, 92 ஆயிரத்து 611 ஆக உயர்வடைந்துள்ளது.

2 ஆயிரத்து 960 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image