கொவிட் தொற்றை காரணம் காட்டி பறிக்கப்படும் தொழிலாளர் உரிமைகள்

கொவிட் தொற்றை காரணம் காட்டி பறிக்கப்படும் தொழிலாளர் உரிமைகள்

​கொவிட் 19 தொற்று காலப்பகுதியில் இலங்கையில் உள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலை வர்த்தக நாமம், உற்பத்தியாளர்கள் தொழிலாளர்களின் சுகாதாரம், தொழிற்பாதுகாப்பு என்பவற்றை குறைத்த பெற்ற வருமானத்தில் பாரிய லாபத்தை உழைத்துக்கொண்டுள்ளன என்று தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இன்று (01) ஜைக் ஹில்ட்டன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இக்கருத்தினை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்டன் மார்க்கஸ், 020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் உலகில் கொவிட் 19 தாக்கத்தை உலகம் உணரத்தொடங்கிய நிலையில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 40% பங்களிப்பை வழங்கிய ஆடை மற்றும் காலணி உற்பத்தித்துறையை சார்ந்த 300,000 தொழிலாளர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

 புள்ளிவிவரங்களுக்கமைய 2020 மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் - இலங்கையில் கொவிட் 19 தொற்று உச்சநிலையிலிருந்த காலப்பகுதியில், இலங்கை ஆடைத் தொழிற்சாலை ஊழிகளில் தொழிலாளர்களில் 1/5 பேர் (சுமார் 55,000) தொழில் மற்றும் ஏனையவற்றை இழந்துள்னர், அவர்களுடைய சராசரி சம்பளத்தில் 40% குறைக்கப்பட்து ( சுமாராக அமெரிக்க $ 24 மில்லியன்).

 அரசாங்கம், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து நெருக்கடிக்கு தீர்வு காண முத்தரப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்ட நிலையில் கலந்துரையாடல்களை மேற்கொண்டபோதிலும் உற்பத்தியாளர்கள் கொவிட் 19 இற்கு பதிலளிக்கம் செயற்பாட்டில் தொழிலாளர்களின் பிரதிநிதித்துவத்தை இணைக்க மறந்துள்ளனர். தொழிற்சாலை உரிமையாளர்களினால் கூட்டாக தவிர்க்கப்பட்ட குறைந்தப்பட்ச நிபந்தனைகளான,

 01. தொழில் அமைச்சினால், முத்தரப்பு பணிக்குழு தீரமானத்தின்படி, கொவிட்-19 இருதரப்பு குழுவை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள தவறியமை.

 02. மேம்படுத்தப்பட்ட நிபந்தனைகளுக்காக கூட்டாக செயற்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக சட்டவிரோதமான பலிவாங்கல்.

 03. தொழிலாளர்களுக்கு அவர்களின் பூரண, நிரந்தர, தொற்று பரவலுக்கு சமாந்தரமாகவோ அல்லது கூடிய ஊதியத்தை வழங்கத் தவறியமை மற்றும் ஊழியர்களின் வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்கத் தவறியமை

என்பவற்றை கவனத்திற்கொண்டு, தொழிலாளர் பாதுகாப்பு மற்றம் அவர்களின் உரிமைகள் கட்டாயமாக அவசியப்படுகின்ற சந்தர்ப்பத்தில், அவற்றைப் பாதுகாத்து, உறுதிப்படுத்த வேண்டும் என்பது எமது எண்ணமாகும்.

உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே உடனடி மற்றும் உண்மையான ஒத்துழைப்பு இல்லாத நிலையில், உலகளாவிய ஆடை உற்பத்தி நாமத்தினால் பொறுப்பேற்கத் தவறிய நிலையில், இலங்கையின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. தற்போதைய நிலைமையை சிறப்பாக தீர்ப்பதற்காக வர்த்தக நாமம் மற்றும் வர்த்தகர்கள் தங்களின் விநியோகஸ்தர்கள் மற்றும் இலங்கையின் தொழிற்சங்களுடன் தொடர்புகொள்வது அத்தியாவசியமானது என்பதுடன், நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக தொழிலாளர்களுக்கு உதவும் திட்டத்தை உருவாக்குவதும் அவசியமாகும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இவ்வூடகவியலாளர் சந்திப்பில் மூத்த தொழிற்சங்கவாதியான பாலித்த அத்துகோரளவும் கலந்துகொண்டிருந்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image