பயிலுநர் பட்டதாரிகளின் நிரந்தர நியமன பிரச்சினை: அமைச்சுக்கு கடிதம்
2019ஆம் ஆண்டு ஆட்சேர்க்கப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் விடயத்தில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் தொடர்பில் இன்று அரச சேவைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தினால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
2019ல் ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளின் நிரந்தர நியமனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பானது
01. HNDA பிரச்சினை.
02. அண்மையில் முன்வைக்கப்பட்ட ஆவணத்தில் பெயர் இல்லாத தரப்பினரின் பிரச்சினை.
03. மத்திய அரசாங்கத்திலிருந்து மாகாண அரசாங்க சேவைக்கு விருப்பம் தெரிவித்தவர்கள் தொடர்பான பிரச்சினை.
04. மாகாண அரசாங்கத்திலிருந்து மத்திய அரசாங்க சேவைக்கு விருப்பம் தெரிவித்தவர்கள் தொடர்பான பிரச்சினை.
05. இடமாற்றம் தொடர்பான வேலைத்திட்டத்தை தயாரித்தல்.
06. அனைத்து மாகாண இடமாற்றத்திற்காக விருப்பம் தெரிவித்த தரப்பினரின் பிரச்சினை.
முதலான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முறையை பேச்சுவார்த்தை ஒன்றை வழங்குமாறு கோருவதுடன், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் தலைவர் லக்மால் திஸாநாயக்கவினால், அரச சேவைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் செயலாளருக்கு இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.