இளைஞர் தொழில் முயற்சி அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் வருமாறு,
புதிய தொழில் முயற்சியாளர்களாக வியாபாரத் துறையில் பிரவேசிக்கும் இளைஞர் சமூகத்திடம் முதலீட்டுக்கு போதுமான நிதிவளம் இன்மை, அவர்கள் முகங்கொடுக்கும் முக்கிய சவாலாக உள்ளது. அதனால் பல்வேறு முறைசாரா முறைகள் மூலம் தேவையான நிதிவளத்தை பெற்றுக்கொள்வதற்கு இளைஞர் தொழில் முயற்சியாளர்கள் முயற்சிப்பதால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது.
சுபீட்சத்தின் நோக்கு அரச கொள்கை பிரகடனத்தின் மூலம் இளைஞர் அபிவிருத்தி நிதியத்தை ஆரம்பிப்பதற்கும், குறித்த நிதியத்தை மேம்படுத்துவதற்காகவும், இளைஞர் அபிவிருத்தி லொத்தர் ஆரம்பிப்பதற்கும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த நிதியத்தை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தாபிப்பதற்கும், அதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.