தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தபோதிலும் அவதானமாக இருக்க வேண்டும்
தற்போது கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளபோதிலும் தொற்று நோய் நாட்டில் இல்லாது போயுள்ளதாக கருத வேண்டாம் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளது. இது நல்ல விடயம். ஆனால் நாட்டில் தொற்று இல்லாமல் போவதாக கருதுவது புத்திசாலித்தனமானது அல்ல. இன்னும் ஆபத்துள்ளது என்பதை உணர்வது மிக அவசியம்.
உலகில் கொவிட் 19 தொற்று பரவும் ஆபத்து தொடர்வதாக உலக சுகாதார தாபனம் அறிவித்துள்ள நிலையில் ஒரு நாடு மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. தொடர்ச்சியாக எழுமாற்றான பிசிஆர் பரிசோதனை பரிசோதனைகளை செய்யப்படவேண்டும். இதனூடாக சமூகத்தில் தொற்றாளர்களை அடையாளங்காண முடியும். அவசியமான நடவடிக்கை எடுக்கப்படாமல் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது என்பது எமது நம்பிக்கையாகும்.