ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் தொடர்பான புதிய கருத்து
2019ஆம் ஆண்டு ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளில், சிறு தொழில் அபிவிருத்தி அமைச்சின் கீழ் ஆட்சேர்க்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு டிசம்பர் மாத கொடுப்பனவு தற்போதுவரை வழங்கப்படாத நிலையில், சிறு தொழில் அபிவிருத்தி அமைச்சு தற்போது இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் பயிலுனர்களுக்கு டந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நிரந்தர நியமனம் வழங்கப்படவிருந்த நிலையில், அரசாங்கத்தின் இயலாமை காரணமாக பயிற்சி ஆண்டு நிறைவடைந்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நிரந்தர ஊழியர்கள் ஆற்றும் கடமைகளை 20,000 ரூபாய் என்ற மிகக்குறைந்த மாதாந்த கொடுப்பனவை பெற்றுக் கொண்டு தாங்கள் ஆற்றுவதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் டிசம்பர் மாதத்திற்கான கொடுப்பனவை உடனடியாக வழங்குமாறும், ஊழியர்களை உடனடியாக நிரந்தர நியமனம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு மீண்டும் நினைவுபடுத்துவதாக தம்மிக்க முனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.