200 ஆண்டுகள் கடந்தும் உரிமைகள் மறுக்கப்பட்ட மலைய மக்கள்!

200 ஆண்டுகள் கடந்தும் உரிமைகள் மறுக்கப்பட்ட மலைய மக்கள்!

தமிழகத்தில் இருந்து கூலித் தொழிலாளரகளாக மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் உரிய உரிமை இதுவரை வழங்கப்படாதுள்ளமையை சுட்டிக்காட்டி நேற்று (16) அட்டனில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

 200 வருடங்களை கடக்கும் நிலையில் எந்த ஒரு உரிமையையும் எந்த அரசாங்கமும் கொடுக்காமையினால் நில உரிமை, மொழி உரிமை, காலாசார உரிமை அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். 

 மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேலின் தலைமையில் இந்த போராட்டம் அட்டன் மல்லியப்பு சந்தியில் இடம்பெற்றது.

எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு, எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் இலங்கையில் காலடி வைத்து எதிர்வரும் 2023ம் வருடத்தோடு 200 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்ல அபிவிருத்தியிலும், இலங்கையின் பொருளாதாராதிற்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்கள் இவர்களின் வாழ்வு நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

சரியான மலையக அரசியல் தலைவர்கள் இன்மையால் தொடர்ந்து வரும் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் பொது மக்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

3

Protest

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image