தொழிலாளர் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள 20,000 தொழிற்சாலைகள்

தொழிலாளர் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள 20,000 தொழிற்சாலைகள்

நாடளாவிய ரீதியில் 20,000 இற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தொழிலாளர் திணைக்களத்திற்கு பதிவுக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, மாவட்ட தொழிற்சாலை பொறியியல் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் 32948 கோப்புகளில், 2022 ஆம் ஆண்டின் இறுதியில், புதிய விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 3153 ஆகும்.

ஒரு தொழிற்சாலையின் குறைந்தபட்ச பதிவுக் கட்டணமாக ஆயிரம் ரூபாயைக் கணக்கிட்டு இந்தக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக, தொழிற்சாலை உரிமையாளர்கள் செப்டம்பர் 27, 2019 திகதியிட்ட சிறப்பு வர்த்தமானி எண். 2142/90 இன் படி பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், 2010-2018 காலகட்டத்தில் தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்காத காரணத்தால் வழக்குத் தொடர ஐம்பத்திரண்டு கோப்புகள் கிடைத்தன, ஆனால் பதினொரு கோப்புகள் மட்டுமே வழக்குத் தொடரப்பட்டதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மூலம் - லங்காதீப

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image