தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள நிலையில் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொருளாதார புனர்வாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் ஊடாக குறித்த சுற்றுநிருபம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு கொடுப்பனவும் இதுவரை பெறாத குடும்பங்களை சேர்ந்தவர்கள் இதற்காக தகுதி பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், சமூர்த்தி, முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர் விசேட தேவையுடையோர் ஆகிய அரசாங்க கொடுப்பனவுகளை பெறுவோருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிவாரண கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேவையான மேலதிக கோட்பாடுகள் திறைசேறியினால் சகல மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பிரதேச ஒருங்கிணைப்பு மற்றும் கிராமிய குழுக்களின் உதவியுடன் கிராம சேவையாளர் மட்டத்தில் சுகாதார நடைமுறையுடன் குறித்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும் என பொருளாதார புணர்வாழ்வு மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் - சூரியன் செய்திகள்