போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக 16 இல் தொழிற்சங்கங்களும் வீதிக்கு!
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடி நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றி உள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
- அரசாங்கத்தினால் மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ள தாங்கிக்கொள்ள முடியாத சுமையினால், உருவாகியுள்ள போராட்டத்தை நசுக்குவதற்கு இடமளிக்காமல் பாதுகாப்போம்.
- பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையுடன், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலையை ஏற்படுத்துவதற்கும், அந்த நிலைமையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தல்
இதன்படி இரண்டு அடிப்படை போராட்ட கோஷங்கள் அமைகின்றன.
- மக்கள் கருத்துக்கு தலை வணங்கு!
- வேலை செய்ய முடியாத அரசாங்கம் வீட்டுக்குச் செல்லவேண்டும்! என்பனவாகும்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையா,
- ஏப்ரல் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு லேக்ஹவுசுக்கு முன்னாலிருந்து காலிமுகத்திடலில் போராட்டக் களத்திற்கு தொழிற்சங்கங்கள் பேரணியாக செல்லுதல்,
- ஏப்ரல் 20ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினமாக பெயரிட்டு, நாடு முழுவதும் எதிர்ப்பு தினமாக நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.