120,000 பட்டதாரிகளின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்க வலியுறுத்தல்
ஒரு இலட்சத்து 20,000 பட்டதாரிகளின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்குமாறு அபிவிருத்தி உத்தி யோகத்தர் சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் சந்திர சூரிய ஆராய்ச்சி மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச சேவை பட்டதாரிகளின் சம்பள பிரச்சினையை தீர்க்குமாறு 16 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் கூறுகிறோம். 2006 ஆம் ஆண்டு முதல் இதனை நாங்கள் கூறுவதற்கு தொடங்கினோம். 2021ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை பட்டதாரிகளின் சம்பள பிரச்சினையை தீர்க்க நடவடிக்கைவில்லை.
இதன் காரணமாக, இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உச்ச நிலையை அடைந்திருக்கிறோம். ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கு, இந்த சுற்றுநிருபம் மூலமாக பாரிய சம்பளப் பிரச்சினை மற்றும் குறைப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே அரச பல்கலைக்கழகத்தில் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் அரச சேவைக்கு ஆட்சேர்க்கப்படும்போது அவர்களுக்கு ஒரு சம்பளம், இவர்களுக்கு ஒரு சம்பளம் என அரசாங்கம் சம்பளத்தை நிர்ணயிக்கின்றது. இதற்கு ஒரு கொள்கை இல்லை.
அதிகாரம் உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல சம்பளத்தை அதிகரித்துக் கொள்கின்றனர். ஏனையவர்கள் போதிய திறமை இருந்தும் சம்பள அதிகரிப்பின்றி இருக்கின்றார்கள். இதுதான் பிரச்சினை.
இதன் காரணமாக அரச சேவைக்குள்ளும், மாகாண அரச சேவைக்குள்ளும் எம்.4 சேவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும், 1999 ஆம் ஆண்டு முதல் 2022 வரையில் சேவையில் ஈடுபடும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடிப்படை சம்பளம் தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. எனவே 16 ஆண்டுகளாக உள்ள இந்த சம்பள பிரச்சினையை நீக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.
எனவே ஒரு அரச பல்கலைக்கழகத்தில் பட்டத்தை பெற்று அரச சேவைக்கு வந்த பின்னர், மாற்றாந்தாய் போல கவனிக்கப்படும் இந்த சம்பள முரண்பாட்டுடன் சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் தயாரில்லை.
இது தொடர்பில் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருக்கும், அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் எழுத்துமூலம் தெரிவிக்கின்றோம். ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் நாங்கள் எழுத்து மூலம் இந்த பிரச்சினைகளை அதிகப்படுத்தியுள்ளோம். ஒரு மாதத்திற்குள் எங்களுக்கு இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறும் கோரி நிற்கின்றோம். – என்றார்.
மலையக மக்களின் தொழில் உரிமைகளை வென்றெடுக்க சங்கிலிப் போராட்டம்