நான்காவது தடுப்பூசியை வழங்க முடிவு

நான்காவது தடுப்பூசியை வழங்க முடிவு

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்புக்கான நான்காவது தடுப்பூசியை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக செல்பவர்களுக்கு அந்தந்த நாடுகளுக்கு தேவைப்படும் வகையில் விரும்பினால் நான்காவது கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு உயர்கல்வி கற்பதற்காக சென்ற மாணவர் குழு ஒன்றுக்கு இதற்கு முன்னர் அவ்வாறான விசேட கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அவ்வாறான நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசி செயற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தமது பணியகத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மூலம் - தினகரன்

நாட்டில் மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை அறிவிப்பு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image