1,183 சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்கள் ஏலத்தில் - அனுரகுமார

1,183 சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்கள் ஏலத்தில் - அனுரகுமார

அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கையினால் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,183 சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதார நெருக்கடியில் இருந்து  நாட்டை மீட்டு விட்டதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கையினால் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர்  30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம்  1183 சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலத்தில் விடப்பட்டுள்ளன.தேசிய மட்டத்திலான  தொழிற்றுறைகள் முழுமையாக இல்லாதொழிந்துள்ளன. இதனை எவ்வாறு பொருளாதார மீட்சி என்று குறிப்பிட முடியும்.

கடந்த அரசாங்கம் பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் சிறு மற்றும் கைத்தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆகவே வீழ்ச்சியடைந்துள்ள தொழிற்றுறையை மேம்படுத்த என்ன திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளன? என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image