நாளை (09) பாடசாலைகளின் இயக்கம் குறித்து கல்வி அமைச்சின் அறிவித்தல்

நாளை (09) பாடசாலைகளின் இயக்கம் குறித்து கல்வி அமைச்சின் அறிவித்தல்

அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (09) வழமைபோல இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச துறையிலுள்ள 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

இந்த நிலையில், சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய சில பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை (09) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர்.

எனினும் நாளை வழமைபோல பாடசாலைகள் இயங்கும் என்று கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image