89 நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரோன்

89 நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரோன்

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு 89 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

முதன் முதலில் தென்னர்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தென்னாபிரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், நைஜீரியா, பிரான்ஸ், இந்தியா, இலங்கை, ஐஸ்லாந்து உள்ளிட்ட 89 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்பானம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image