ஒமிக்ரோன் பரவல்: உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள புதிய அறிவித்தல்
ஒமிக்ரோன் திரிபு சர்வதேச ரீதியில் பரவிவரும் நிலையில், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க, பொதுமக்கள் தங்களின் விடுமுறைகால திட்டங்களைக் இரத்துச் செய்யுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
'ஒரு வாழ்க்கை இரத்துச் செய்யப்படுவதைக் காட்டிலும், ஒரு நிகழ்வு இரத்து செய்யப்படுவது சிறந்தது' என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனம் கெப்ரியேஸஸ் தெரிவித்துள்ளார்.
கடினமாக தீர்மானங்கள் கட்டாயமாக எடுக்கப்பட வேண்டும்.
ஒமிக்ரோன் திரிபு உலகளாவிய ரீதியில் 89 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், எதிர்வரும் நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு விடுமுறைகளை முன்னிட்டு, உலக சுகாதார ஸ்தாபனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.