எந்த கொவிட் தடுப்பூசியைப் பெற்றவர்கள் அமெரிக்காவுக்கு செல்லலாம்?

எந்த கொவிட் தடுப்பூசியைப் பெற்றவர்கள் அமெரிக்காவுக்கு செல்லலாம்?

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசர பயன்பாட்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கொவிட்-19 தடுப்பூசியையும் பெற்றுக்கொண்ட சர்வதேச பயணிகளுக்கு, அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளது.



அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நிறுவகம் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவகத்தினால், அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கும், அமெரிக்காவுக்குள் நுழைய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

சீனா, இந்தியா, பிரேஸில் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட 33 நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீக்குவதாக கடந்த மாதம் 20 ஆம் திகதி அமெரிக்கா அறிவித்திருந்தது.

பூரண தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அமெரிக்காவினால் ஏற்றுக்கொள்ளப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

அதனை, பின்னர் அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான விபரங்களை அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நிறுவகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, பைஸர், மொடெர்னா, ஜொன்சன் எண்ட் ஜொன்சன், அஸ்ட்ராசெனகா, சைனோபாம் மற்றும் சினோவெக் முதலான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image