உலகின் பலவேறு நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ள, திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி, திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய கொரோனா திரிபுக்கு அல்பா (Alpha) என்றும், தென்னாபிரிக்க திரிபுக்கு பெ(ட்)டா (Beta) என்றும், இந்திய திரிபுக்கு டெல்டா (Delta) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இது, விவாதங்களை எளிதாக்குவதோடு, பெயர்கள் தொடர்பான சில களங்கங்களை அகற்ற உதவுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.