பிரித்தானியாவுடனான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தும் ஐரோப்பிய நாடுகள்

பிரித்தானியாவுடனான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தும் ஐரோப்பிய நாடுகள்

பிரித்தானியாவுக்கான விமான மற்றும் “ஈரோ ஸ்ரார்” ரயில் உட்பட சகல போக்குவரத்துகளையும் அடுத்த 48 மணிநேரங்களுக்கு நிறுத்திவைக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது.

திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதை அடுத்து இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நேற்று (20) நள்ளிரவு தொடக்கம் இத்தடை நடைமுறைக்கு வரவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்துக்கமைய இத்தடை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், பல்கேரியா போன்ற நாடுகளும் பிரித்தானியாவுடனான விமானப்போக்குவரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.

பிரித்தானியாவில் திரிபடைந்த புதிய வைரஸ் தொற்று காரணமாக தற்போது பெரும்பாலான பகுதிகள் முடக்கப்படடுள்ளன. இதுவரை பிரித்தானியாவில் 36 ஆயிரம் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதுடன் 326 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு கருதி கட்டுப்பாடுகளை வலுப்படுத்திக்கொள்ளுமாறு ஏனைய ஐரோப்பிய நாடுகளை உலக சுகாதார தாபனம் வலியுறுத்தியுள்ளது. இப்புதிய திரிபடைந்த வைரஸ் தொற்றும் தென்னாப்பிரிக்காவிலும் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image