இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அதிகளவான பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
10 ஆவது பாராளுமன்ற தேர்தலில் 21 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு துறைகளில் தொழில் பின்னணியைக் கொண்டவர்கள்
விசேடமாக மலையக வரலாற்றில் முதல் முறையாக பெண்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 3 பெண் உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.
முதலாவது பெண் பிரதிநிதி
இலங்கை பாராளுமன்றத்துக்குத் தெரிவான முதல் பெண் பிரதிநிதி என்ற பெருமையை அடெலின் மொலமுரே பெற்றுள்ளார்.
அவர் 1931 ஆம் ஆண்டில் டொனமூர் அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இடம்பெற்ற இடைக்கால தேர்தலில், அப்போதைய சட்டமியற்றும் சபையாக இருந்து அரச சபைக்கு அவர் தெரிவாகியிருந்தார்.
இலங்கை ஜனநாயக குடியரசில் 1989 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6 சதவீதத்தை விஞ்சாத அளவிலேயே இருந்து வந்தது.
இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு அதிகளவு பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட ஆண்டுகளாக 1989, 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளைக் குறிப்பிடலாம். குறித்த வருடங்களில் தலா 13 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தனர்.
அத்துடன், 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் ஊடாக 9 ஆவது நாடாளுமன்றத்துக்கு 12 பெண் பிரதிநிதிகள் தெரிவாகியிருந்தனர்.
வரலாற்றில் முதன்முறை அதிக பெண் பிரதிநிதிகள்
10ஆவது பாராளுமன்றத் தேர்தலில் 21 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். அவர்களி்ல் 19 பேர் தேசிய மக்கள் சக்தியின் ஊடாக தெரிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய 655,289 வாக்குகள்
கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன 80,814 வாக்குகள்
சமன்மலி குணசிங்க - 59,657 வாக்குகள்
கம்பஹா மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
ஆசிரியை ஹேமாலி சுஜீவா - 66,737 வாக்குகள்
களுத்துறை மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி - 131,375
தொழிலதிபர் ஓஷானி உமங்கா 69,932 வாக்குகள்
கண்டி மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க - 58,283 வாக்குகள்
மாத்தளை மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
பட்டதாரி தீப்தி வாசலகே - 47,482 வாக்குகள்
காலி மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
சட்டத்தரணி ஹசாரா நயனதாரா பிரேமதிலக்க - 82,058
கேகாலை மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
சட்டத்தரணி சாகரிக்கா அதாவுத - 59,019 வாக்குகள்
இரத்தினபுரி மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
சட்டத்தரணி நிலூஷா லக்மாலி 48,791 வாக்குகள்
திகாமடுல்ல மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
முதுமணிகே ரத்வத்த - 32,145 வாக்குகள்
குருநாகல் மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
சட்டத்தரணி கீதா ரத்ண குமாரி 84,414 வாக்குகள்
புத்தளம் மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
சட்டத்தரணி ஹிருனி மதுஷா விஜேசிங்க - 44,057 வாக்குகள்
மொனராகலை மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
ஆசிரியை சதுரி கங்காணி - 42,930 வாக்குகள்
நுவரெலியா மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
அனுஷ்கா தர்ஷனி திலகரத்ன -34,035 வாக்குகள்
கண்டி மாவட்டம் ஐக்கிய மக்கள் சக்தி
சட்டத்தரணி சமிந்ராணி கிரியெல்ல - 30,780 வாக்குகள்
மாத்தளை மாவட்டம் - ஐக்கிய மக்கள் சக்தி
ஆசிரியர் ரோஹிணி விஜேரத்ன - 27,845 வாக்குகள்
மலையகத்தின் 3 பெண் பிரதிநிதிகள்
நுவரெலியா மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
சமூக ஆர்வலர் கிருஷ்ணன் கலைச்செல்வி - 33,346 வாக்குகள்
பதுளை மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
காப்புறுதித்துறை பணியாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகள்
மாத்தறை மாவட்டம் - தேசிய மக்கள் சக்தி
,
ஆசிரியை சரோஜா சாவித்திரி போல்ராஜ் - 148379 வாக்குகள்