2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் - அரச ஊழியர்களின் சம்பளமும்

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் - அரச ஊழியர்களின் சம்பளமும்

அரச ஊழியர்களுக்கு 20,000 சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என  பல்வேறு தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, மூன்றாம் வாசிப்பு மீததன விவாதம் இடம்பெற்று வருகின்ற நிலையில், 20,000 ரூபா சம்பளம் அல்லது கொடுப்பனவை வலியுறுத்தி, பல்வேறு அரச துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 'வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை“ என்ற தொனிப் பொருளில் பாராளுமன்றத்தில் கடந்த 13 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்

  • எதிர்பார்க்கப்படும் அரச வருமானம் 4,127 பில்லியன் ரூபா
  • அரசாங்கத்தின் மொத்த செலவினம் 6978 பில்லியன் ரூபா
  • துண்டு விழும் தொகை 2,851 மில்லியன் ரூபா
  • கடன், வட்டி செலுத்துவதற்காக 6,919 பில்லியன் ரூபா
  • அடுத்த வருடத்திற்கான கடன் தேவை 7,350 மில்லியன் ரூபா
  • அதற்காக அரசாங்கத்தின் கடன் எல்லையான 3,900 பில்லியன் ரூபாவை மேலும் 3,450 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க யோசனை.

அரச ஊழியர்களின் சம்பளம்

1.3 மில்லியன் (13 இலட்சம்) அரச ஊழியர்களுக்கு தற்போது கிடைக்கும் 7,800 ரூபா மாதாந்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 10,000 ரூபாவால் அதிகரிக்க (ரூ.17,800)  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த​க் கொடுப்பனவு 2024 ஏப்ரல் மாதம் சம்பளத்துடன் சேர்க்கப்பட உள்ளதுடன், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான நிலுவைத் தொகையை அக்டோபர் மாதத்திலிருந்து தவணை அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது நடவடிக்கை எடுக்கப்படும். 

ஓய்வூதியம்

அரச ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 730,000 ஆகும். அவர்களுக்கு தற்போது கிடைப்பது ரூபா 3,525 மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாகும். அரச ஓய்வூதியதாரர்களின் மாதாந்த வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவை ரூபா 6,025 வரை அதிகரிப்போம். இந்த அதிகரிப்பு 2024 ஏப்ரல் மாதம் முதல் அமுல்படுத்தப்படும். 2024 ஆண்டில் ரூபா 386 பில்லியன் ஓய்வூதியத்திற்காக செலவு செய்யப்படும்.

விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியம்

விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்திற்காக, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 6 – 7 சதவீதமான செலுத்தப்படும் பங்களிப்பை 2024 ஏப்ரல் முதல் அனைத்து சேவைப் பிரிவினருக்கும் 8 சதவீதமாக அதிகரிக்க முன்மொழிவு.

​தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு

அரசு ஊழியர்கள் 20,000 ரூபாய் சம்பள உயர்வை கோருகின்ற நிலையில் 10,000 ரூபாய் சம்பளம் உயர்வை வழங்கும் அதேநேரம், ஓய்வூதியத்திற்காக அறவிடப்படும் 6-7% பங்களிப்பை, 8% ஆக அதிகரிப்பதன் மூலம் சம்பள குறைப்பு இடம்பெறுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.

10,000 ரூபாய் சம்பளம் அதிகரிப்புக்கு முன்னதாகவே 15 சதவீதமாக இருந்த வற் (VAT) வரியை அரசாங்கம் 18 சதவீதமாக உயர்த்தி உள்ளது. 2024 ஜனவரி முதல் இந்த வரி அமுலுக்கு வருகிறது. இதன் காரணமாக எரிபொருள் உள்ளிட்ட ஏனைய அனைத்து அத்தியாவசிய சேவை பொருட்களின் விலை அதிகரிக்கும். இந்த வரி அதிகப்பின் காரணமாக ஒவ்வொரு நபரும் அரசாங்கத்திற்கு 12,000 முதல் 13,000 ரூபாய் மாதாந்தம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இந்நிலையில் 10,000 ரூபாய் சம்பளம் அதிகரிப்பு ஏப்ரல் மாதமே வழங்கப்பட உள்ளது. 10,000 ரூபாய் சம்பளம் அதிகரிப்பு வழங்கப்படும் போது அதற்கு முன்னதாகவே அரச ஊழியர்கள் சுமார் 12,000 ரூபாவை அரசாங்கத்திற்கு வரியின் ஊடாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பானது, அரச ஊழியர்களை சட்டியில் இருந்து அடுப்பில் தள்ளும் நிலைக்கு ஒப்பானதாகும் என தொழிற்சங்கங்கள் குற்றம் சமத்துகின்றன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image