தொழில் இழப்புக்கு வித்திடும் செயற்கை நுண்ணறிவு!

தொழில் இழப்புக்கு வித்திடும் செயற்கை நுண்ணறிவு!

செயற்கை நுண்றிவின் வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அது வேலையின்மைக்கு வித்திடுவதாக வாத விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன.

இந்தியாவில் இலத்திரனியில் வர்த்தக நிறுவனமான துக்கான் நிறுவனம் தனது ஊழியர்களில் 90 வீதமானவர்களை நீக்கி விட்டு அவர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுமித்ஷா சமூக வலைத்தளங்களில் கருத்து வௌியிட்டிருந்தமையானது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொவிட் பெருந்தொற்று, ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையிலான போர் உட்பட பல காரணங்களினால் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்கள் திண்டாடி வரும் நிலையில் தற்போது செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மென்மேலும் மக்களை தொழிலிழப்புக்கு காரணமாகிறது என்பது கசப்பான உண்மை.

AI news readerகுறிப்பாக கடந்த வாரம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் இயங்கும் OTCதொலைக்காட்சி நிறுவனம் லிஸா என்ற பெயருடன் செயற்கை நுண்ணறிவு முறையைப் பயன்படுத்தி செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியிருந்து. இது செய்தி வாசிப்பாளர்களையும் ஊடகத்துறை சார்ந்தவர்களையும் ஏன் ஊடகத்தில் பணியாற்றும் கனவுடன் இருக்கும் பல இளைஞர் யுவதிகளை அச்சம் கொள்ள வைத்திருக்கும் என்பதை மறுக்க முடியாது.

செயற்கை நுண்ணறிவை நம்பி 90 வீதமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்த துக்கான் நிறுவன உயரதிகாரி, வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்கக் கூடிய நேரம் என்பது 1.44 நிமிடங்கள் என்பதில் இருந்து உடனடியாக மாறியது. அவர்களின் குறைகளை தீர்க்கும் கால அளவு என்பது 2 மணி நேரம் 13 நிமிடங்களில் இருந்து 3 நிமிடங்கள் 12 நொடிகளாக குறைந்துள்ளது. வாடிக்கையாளர் சேவைக்கான செலவின் அளவு 85 சதவீதம் குறைந்துள்ளது. ” என்று குறிப்பிட்டார் என்று பிபிஸி செய்திச் சேவை சுட்டிகாட்டியிருந்தது.

வாடிக்கையாளர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் விரைவாகவும் சரியாகவும் செயற்கை நுண்ணறிவினூடாக பதிலளிக்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள அமித்ஷா, எம்மைப் போன்ற ஆரம்ப நிலை கம்பனிகள், தம்மை பெரு நிறுவனங்களாக வளர்த்துக்கொள்வதை விடவும் எப்போதுமே இலாப நோக்கைக் கொண்டே செயற்படுகின்றன. நாமும் அதற்கு விதிவிலக்கல்ல. நீண்ட காலமாக வாடிக்கையாளர் சேவையை சரியாவ வழங்குவதில் திணறி வந்த நிலையில் அதனை மேம்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவுத் தளம் உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Dukaan12அமித்ஷாவின் இவ்வறிப்பு பெரும் விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. இந்த கடினமான முடிவின் காரணமாக ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இது இவ்வாறு இருக்கு நேற்று முன்தினம் (14) ஹொலிவுட் நடிகர் நடிகைகளும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். ஹொலிவுட் திரைக்கதை எழுத்தாளர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு நடிக நடிகையர்களும் கரம்கோர்த்தனர். 60 வருட வரலாற்றில் இடம்பெற்ற பாரிய பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டமாக இது பார்க்கப்படுகிறது. கலிபோர்னிய நகரான லொஸ் ஏஞ்சலஸில் சுமார் 160,000 நடிக நடிகையர்கள் நள்ளிரவில் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர். இதனால் ஐக்கிய அமெரிக்க ராச்சியத்தில் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புகள் தடைப்பட்டதாக பிபிஸி தெரிவித்துள்ளது.

இணையத்தில் தொலைக்காட்சித் தொடர்களையும் திரைப்படங்களையும் வௌியிடுவோர் தங்களின் லாபத்தை மிகவும் சமமாகப் பகிர்ந்துகொள்வது மற்றும் சிறந்த வேலை நிபந்தனைகளை ஒப்புக்கொள்வது Screen Actors Guild (SAG) அமைப்பின் நோக்கமாகும். டிஜிட்டல் அவதாரங்களால் நடிக நடிகையர்களின் வாய்ப்புகள் பறிபோவதில் இருந்து பாதுகாப்பதையும் அவ்வமைப்பு விரும்புகிறது. வேலைநிறுத்தத்தின் போது, ​​நடிகர்கள் மற்றும் நடிகைகள் படங்களில் தோன்றவோ அல்லது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட படங்களை விளம்பரப்படுத்தவோ முடியாது. இதன் விளைவாக, கடந்த வியாழக்கிழமை இரவு (ஜூலை 13) வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது, ​​கிறிஸ்டோபர் நோலனின் 'ஓப்பன்ஹைமர்' லண்டன் பிரீமியரில் இருந்து திரைப்பட நட்சத்திரங்கள் சிலியன் மர்பி, மாட் டாமன் மற்றும் எமிலி பிளண்ட் ஆகியோர் வெளியேறினர்.

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? (Artificial intelligence - AI)

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது ஒரு கணினி அல்லது ஒரு கணினியால் கட்டுப்படுத்தப்படும் ஒரு ரோபோவின் திறன் ஆகும், இது பொதுவாக மனிதர்களால் செய்யப்படும் பணிகளைச் செய்யும், ஏனெனில் அவர்களுக்கு மனித நுண்ணறிவு மற்றும் விவேகம் தேவைப்படுகிறது. ஒரு சாதாரண மனிதனால் செய்யக்கூடிய பல்வேறு வகையான பணிகளைச் செய்யக்கூடிய AI கள் இல்லை என்றாலும், சில AI கள் குறிப்பிட்ட பணிகளில் மனிதர்களை பொருத்த முடியும்.

இயந்திரக் கற்றலும் செயற்கை நுண்ணறிவும் ஒன்றா?

இல்லை, செயற்கை நுண்ணறிவும் இயந்திர கற்றலும் ஒன்றல்ல, ஆனால் அவை நெருங்கிய தொடர்புடையவை. இயந்திர கற்றல் என்பது ஒரு கணினியை அதன் உள்ளீடுகளில் இருந்து கற்றுக்கொள்ள பயிற்சியளிக்கும் முறையாகும், ஆனால் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் வெளிப்படையான நிரலாக்கம் இல்லாமல். கணினி கற்றல் செயற்கை நுண்ணறிவை அடைய உதவுகிறது.

சமூகத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்

சமூகத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் பரவலாக விவாதிக்கப்படுகிறது. AI ஆனது அன்றாட வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகிறது என்று வாதிடுகின்றனர், மேலும் மனிதனால் செய்யக்கூடியதை விடவும் வழக்கமான மற்றும் சிக்கலான பணிகளைச் சிறப்பாகச் செய்வதன் மூலம் வாழ்க்கையை எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும், மேலும் திறமையாகவும் ஆக்குகிறது என்று ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும் மனிதனுடைய தனிப்பட்டத் தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும், மக்களை வகைப்படுத்துவதனால் இன பாகுபாடு அதிகரிக்கும் என்றும் பல தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை தோன்றி, பாரிய வேலையின்மைப் பிரச்சினைக்கு காரணமாக அமையும் என்றும் மற்றொரு சாரார் கருத்து வௌியிட்டு வருகின்றனர்.

எதிர்வரும் 5 வருடங்களில் 25 வீதமான தொழில் வாய்ப்பு செயற்கை நுண்ணறிவு பயன்பாடு காரணமாக பாதிக்கப்படும் என்று உலக பொருளாதார மன்றம் (the World Economic Forum) அமைப்பு வௌியிட்டுள்ள புதிய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நியுயோர்க்கைத் தளமாக கொண்டு இயங்கும் முதலீட்டு வங்கியான கோல்ட்மனுடைய கணிப்பிற்கமைய மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடானது சுமார் 300 மில்லியன் வேலைவாய்ப்புக்களைப் பாதிக்கும்.

உதவக்கூடிய, ஆனால் சீர்குலைக்கும் தொழில்நுட்பத்தின் விளைவுகளை நாம் இப்போது காண்கிறோம். ChatGPT, Bard and Bing போன்ற செயற்கை நுண்ணறிவுக் கருவிகளினால் கடந்த மாதங்களின் தொழிற்சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை காணக்கூடியதாக இருப்பதாக அவுட் லுக் இந்தியா இணையதளம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனமான Challenger, Gray and Christmas தனியார் நிறுவனத்தின் ஆய்வுக்கமைய கடந்த மே மாதம் மாத்திரம் உலகலவில் 4000 பேர் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு காரணமாக தொழில்வாய்ப்பினை இழந்துள்ளனர். இது மொத்த வேலையிழப்பு வீதத்தில் சுமார் 4.9 சதவிகிதம் ஆகும். இதில் அனைத்து துறைகளும் உள்ளடங்குகின்றன.

மே மாதத்தில் மாதத்தில் மாத்திரம் 80,089 வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. அதில் 3900 நேரடியாக செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புபட்ட இழப்பாகும். ஏனையவை பொருளாதார நிலைமைகள், நிறுவன மறுசீரமைப்பு, செலவுக் குறைப்பு மற்றும் இணைத்தல் & கையகப்படுத்துதல் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்பட்ட வேலையிழப்புகளாகும்.

Arthy Packiyanathan

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image