வெளிநாட்டிலிருந்து கடன் பெற்று நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிப்பது பயன் உடையது அல்ல என தெரிவித்து ரயில்வே துறையின் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அடையாள பணிப்புறக்கணிப்பு மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்ததாக ரயில் இயநதிர சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை காரணமாக அந்த அடையாள பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் எமது இணைய தளத்திற்கு கருத்து தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
ஓமந்தை முதல் மஹவ வரையிலான 131 கிலோமீற்றர் வரையான ரயில் பாதையை அமைப்பதற்காக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில் பாதையை முழுமையாக அகற்றி, அதனை புதிதாக அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். நாட்டுக்கு கிடைக்கும் கடனில் 100 மில்லியன் டொலர் அளவிலான நிதி இதற்காக செலவிடப்பட உள்ளது.
திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பிரதான பாலம், பாதைகளை அண்மித்த குறுக்கு வீதிகள், அதற்கு அத்தியாவசியப்படுத்தப்பட வேண்டிய பல்வேறு பணிகளுக்கு உள்வாங்கப்படவில்லை. இவ்வாறானதொரு வேலைத்திட்டம் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் மாத்தறை முதல் களுத்துறை தெற்கு வரை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனால் எங்களுக்கு ஏற்பட்ட புதிய பிரதி பலன் இல்லை. ரயில்களின் வேகத்தை மேலும் அதிகரிப்பதற்கு அந்தப் பணிகள் இடம்பெற்றன. ஆனால் அது நடைபெறவில்லை. பாலம், சமிக்ஞை கட்டமைப்புகள், குறுக்கு விதிகளைப் விதிகளை புனரமைக்காமல், வீதிகளில் பிரதான வளைவுகளை புனரமைக்காமல் ரயில்களின் பயண காலத்தை குறைக்க முடியாது என இதன்போது நான் கூறினேன். அன்று மாத்தறைக்கு ரயில் ஒன்று சென்ற நேரத்திற்கு தான் இப்போதும் செல்கின்றது. இவ்வாறாக சாதகமான பிரதிபலன் கிடைக்கப்பெறவில்லை என்று அறியக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலையிலும் இப்படியான செலவில் இதுபோன்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமா என இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.
இப்படியாக கடன் தொகையை நிதி உதவியாக பெற்று செலவு செய்து பணத்தை வீணடிப்பதில் எவ்வித பலனும் இல்லை. நாடு என்ற அடிப்படையில் அந்த நிதியை நாங்கள் செலுத்த வேண்டும். இருக்கின்ற ரயில் பாதையை அவ்வாறே வைத்துக்கொண்டு, இரட்டைப் பாதையாக அந்த நிதியின் ஊடாக பாதை ஒன்றை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே எமது யோசனையாகும். மஹவ ஓமந்தை வரையான பகுதிக்கு இடையில் அவ்வாறு செய்தால், அதற்காக காணிகளைப் பெற்றுக் கொள்வதில் கூட பாரிய பிரச்சினைகள் இல்லை. அவ்வாறு செய்தால் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களைவிடஉபோதுமான அளவு ரயில்களை சேவையில் ஈடுபடுத்த முடியும்.
இரண்டு பாதைகள் இருப்பதனால் பிரச்சினையில்லை. இந்தப் பாதைக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், ரயில் சேவையை பாதிப்பின்றி அந்தப் பாதையின் ஊடாக முன்னெடுத்து, அந்தப் பாதையை சீரமைக்கலாம். ஆனால் இப்படியாக அந்தப் பாதையை முழுமையாக அகற்றிவிட்டு புதிதாக பாதையை அமைக்கும்போது, ஒரு வருடத்திற்கும் அதிக காலம் பாதை மூடியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், அந்தப் பாதையை மூடாமல், அது அவ்வாறு இருக்கும்போது வேறு ஒரு பாதையை அமைக்க முடியும். இந்த யோசனை குறித்து விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் சாதகமான பதிலை வழங்கியிருந்தபோதும் அதில் பிரச்சினை இருக்கின்றது என்பது உண்மையாகும்.
பேச்சுவார்த்தை வழங்கப்பட்டது. பிரச்சினையை தீர்ப்பதாக கூறிவிட்டு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என்பதை நாங்கள் அறியப்படுத்தினோம். இதன் அபகீர்த்தி தொடர்ந்து திணைக்களத்திற்கு ஏற்படும். தற்போது அமைச்சின் ஆலோசகர் ஒருவருக்கும், ரயில் பொது முகாமையாளருக்கும் இது தொடர்பில் ஆராய்ந்து கொள்ளப்படக் கூடிய மிகப் பொருத்தமான நடவடிக்கையை எது என்ற பரிந்துரைகளுனான அறிக்கை ஒன்றை வழங்குமாறு அமைச்சரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திட்டத்தை மாற்றி பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான இயலுமை குறித்து இதன்போது ஆராய்ந்து, அந்த யோசனையை அமைச்சரவைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்வதற்கு அல்லது மஹவ முதல் பொல்காவலை வரையான பகுதியை உள்வாங்கிக்கொள்ள நாங்கள் யோசனை தெரிவித்தோம்.
இந்தப் பாதை புனரமைப்பு அபிவிருத்தி யோசனைக்கு மேலதிகமாக மேலும் சில பிரச்சினைகள் தொடர்பில் ரயில் தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணச் சீட்டுக்களை வழங்கும் முறைமையை நவீனமயபடுத்தும் திட்டம் அதுவாகும். அது தொடர்பிலும் ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக்க தொடங்கொட கருத்து தெரிவித்தார்.
ரயில் பயணச் சீட்டுக்களை விநியோகிக்கும் முறைமையை நவீனமயப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டமும் இதுபோன்ற தோல்வியான திட்டமாகும். இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் 22 மில்லியன் டொலரை செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தை ஆராய்ந்து பார்க்கும்போது அதில் பல்வேறு பலவீனங்கள் உள்ளன. ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் விடயம்கூட பிரச்சினையானதுதான். அவர்களை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்கள் கூட இல்லை. இது தொடர்பில் தொலைத் தொடர்பு நிறுவனம் மிகவும் சாதகமான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. தொடர்பு கொள்ளக் கூட முடியாத ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்குவதை விடவும் உள்நாட்டு நிறுவனமான தொலைததொடர்பு நிறுவனத்திற்கு அதனை வழங்குவது பொருத்தமானது என்று நாங்கள் கூறுகின்றோம். ஏனெனில் அவர்கள் ஆரம்பத்திலேயே நிதியை எதிர்பார்க்க மாட்டார்கள். இதனை நடைமுறைக்கு கொண்டு வந்து நடைமுறைப்படுத்தும்போதுதான் சில சில கட்டங்களாக நிதியை எதிர்பார்ப்பார்கள். வெளிநாட்டு கடன் அதிகரிக்காது. அரசுடன் தொடர்புடைய பொறுப்புடைய ஒரு நிறுவனமாகும். எனவே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துடன் இணைந்து செல்ல வேண்டும். இந்த திட்டத்திற்கும் அமைச்சர் இணங்கியுள்ளார். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக பின்னடிக்கின்றனர். அது தொடர்பில் நாங்கள் அவதானத்துடன் இருக்கின்றோம். – என்றார்.
சிங்களத்தில் - பி.டபிள்யு.முத்துகுடஆராச்சி
தமிழில் - ராஜா