பெருந்தோட்டத்துறை தொடர்பான ஒழுங்குவிதிகளுக்கு பாராளுமன்றில் அனுமதி

பெருந்தோட்டத்துறை தொடர்பான ஒழுங்குவிதிகளுக்கு பாராளுமன்றில் அனுமதி

பெருந்தோட்டத்துறை தொடர்பான ஒழுங்குவிதிகள் குறித்த இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள்  பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.

இதற்கமைய 1979ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க, விளைபொருட் தரகர்களுக்கு உரிமமளித்தற் சட்டத்தின் கீழ் 2021 ஏப்ரல் 08ஆம் திகதிய 2222/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரிசுரிக்கப்பட்டு 2022.01.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்பட்டன.

விளைபொருட் தரகர் (தேயிலை) எனும் தொழிலைக் கொண்டு நடத்துவதற்கான உரிமம் ஒன்றுக்கு செலுத்தப்படற்பாலனவான உரிமக் கட்டணம் ஒரு மில்லியன் ரூபாவாகத் திருத்துதல் உள்ளிட்ட திருத்தங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடவும்
https://www.google.com/url?q=http://documents.gov.lk/files/egz/2021/4/2222-44_T.pdf&source=gmail&ust=1645843635877000&usg=AOvVaw0dX5KLU9wZmyukA5ic23WK">http://documents.gov.lk/files/egz/2021/4/2222-44_T.pdf

அத்துடன், இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழ் 2021 ஓகஸ்ட் 18ஆம் திகதிய 2222/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமாப் பத்திரிகையில் பிரிசுரிக்கப்பட்டு 2022.01.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்குவிதிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த ஒழுங்குவிதி 2021 ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறப்பர் (மீள்நடுகை) மானிய ஒழுங்குவிதிகள் என எடுத்தக்காட்டப்படுவதுடன், 2019ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01ஆம் திகதியன்று நடைமுறைக்கு வந்தது. இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இறப்பர் மீள்நடுகைக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள இறப்பர் தோட்டத்துக்கு அல்லது சிறுபற்று நிலத்தில் மீள்நடுகை செய்வதற்காக மானியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த ஒழுங்குவிதி வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடவும்
https://www.google.com/url?q=http://documents.gov.lk/files/egz/2021/8/2241-36_T.pdf&source=gmail&ust=1645843635878000&usg=AOvVaw1OKIpfxBcNqOx8iZxWPDwd">http://documents.gov.lk/files/egz/2021/8/2241-36_T.pdf

மிகைக்கட்டண வரியினை விதிப்பதற்கும் அதனோடு தொடர்புபட்ட அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செயற்படுவதற்குமான சட்டமூலம் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடவும்
https://www.google.com/url?q=http://documents.gov.lk/files/bill/2022/2/173-2022_T.pdf&source=gmail&ust=1645843635878000&usg=AOvVaw0ZZSM3AcaLjpvyguCJcbKU">http://documents.gov.lk/files/bill/2022/2/173-2022_T

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image