பெருந்தோட்ட காணி, வீடமைப்பு தொடர்பில் வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகள்
பெருந்தோட்டத் துறை காணி, வீடமைப்பு தொடர்பில் நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஷ நேற்று (12) வரவு-செலவுத் திட்ட உரையில் தெரிவித்த விடயங்கள்
பெருந்தோட்டக் காணி
பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் விசேட அடிப்படையில் பயிரிடப்படாத காணிகளை வழங்கி புதிய விவசாய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதற்கும் உயர் தொழில்நுட்ப விவசாய பூங்காக்களை ஏற்படுத்தி விவசாய மற்றும் பெருந்தோட்டத் துறையில் பயிரிடப்பட்டுள்ள காணியின் அளவை விரிவாக்கம்செய்வதற்கு முன்மொழிகிறேன்.
பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் அதேபோன்று பொது மக்களுக்கும் சொந்தமான காணிகளைப் பயன்படுத்தல் மற்றும் தனியார் காணிகள் அத்துடன் கட்டடங்களினதும் வேறு சொத்துக்களினதும் உயர்ந்தபட்ச பயன்பாடு தொடர்பான சட்டங்களை அறிமுகப்படுத ;துவதற்கும் நான் மேலும் முன்மொழிகின்றேன்.
பெருந்தோட்டத்துறை
சர்வதேச சந்தையினை வெற்றி கொள்வதற்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய, பெறுமதி சேர்க்கப்பட்ட பெருந்தோட்டத்துறையினை உருவாக்குவது எமது நோக்கமாகும். இதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது,
• வெளிநாட்டுச் செலாவணி வருமானத்தினை அதிகரித்தல், மற்றும்
• பயிர்ச்செய்கையாளர்களின் வருமானத்தினை அதிகரித்தல்.
எனவே, பெருந்தோட்டத் துறையிலிருந்து ஆகக்கூடிய பயனைப் பெற்றுக்கொள்வதற்கு தற்பொழுது பயிரிடப்பட்டுள்ள தேயிலை, தெங்கு, இறப்பர், கறுவா, மிளகு, கோப்பி, சிட்ரஸ் வெனிலா, ஏலக்காஙய், கராம்பு உள்ளடங்கலான ஏனைய ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பின்னடைவினை இனம்
காணுதல் வேண்டும். இதனடிப்படையில் பின்வருவனவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும்.
• மீள் பயிரிடல்
• இடைப் பயிரிடல்
• புதிய பயிர்ச்செய்கை
நீர் வழங்கலினை உறுதிப்படுத்துவதன் மூலம் குறித்த பயிர்களின் உற்பத்தியினை வினைத்திறன் மிக்கதாக அதிகரிக்க முடியும். மேலும், தனியார் முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும் ஏற்றுமதிச் சந்தையினை உபாய ரீதியில் வெற்றி கொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதற்காக ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியேற்பாட்டுக்கு மேலதிகமாக மேலும் ரூபா 10,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி
'சுபீட்சத்தின் நோக்கு' அரசாங்கத்தின் கொள்கை ஆவணத்திற்கேற்ப அனைத்துக் குடும்பங்களும் தமது சொந்த வசதியான வீடுகளில் வாழ்வதற்கான சூழல் ஒன்றினை உருவாக்குவது எமது நோக்கமாகும்.
இதனை யதார்த்த பூர்வமாக மாற்றும் வகையில் நகர, கிராமிய மற்றும் தோட்டத்துறைகளில் குறைவருமானம் பெறும் குடும்பங்களை இலக்காகக் கொண்டு அனைத்துக் கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி வீடமைப்பு கருத்திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
சிலர் தமக்கான சொந்த வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்கான பொருளாதார ஆற்றலினைக்கொண்டுள்ளனர். இன்னும் சிலர் வீடுகளை நிர்மாணிப்பதற்கு வங்கிகளிலிருந்து கடனைப் பெறமுடியுமாக இருக்கின்றனர். இருந்தபோதிலும் நகர, கிராமிய மற ;றும் தோட்டத்துறைகளில் வாழ்கின்ற அப்பாவி சமூகங்கள் தமது வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்குத் தேவையான உதவியினை அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது.
எனவே, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக நகர வீடமைப்புக்காக ரூபா 2,000 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக ரூபா 5,000 மில்லியன் கிராமிய வீடமைப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள புற நகர்ப் பகுதிகளில் ஏற்கனவே, நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுவரும் கூட்டாதனங்களின் நிர்மாணத்தினை 2024 வருடமளவில் அளவில் பூரணப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தோட்டமக்களின் வீடமைப்பு நிலைமைபற்றி விளக்குவதற்கு தேவையில்லையென நான் நினைக்கின்றேன். அவற்றின் நிலைமை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது. குறி;த்த ஊழியர்கள் பிரதான ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான தேயிலைக்கான அடிப்படையினை வழங்குகின்றனர். எனவே, அந்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவது எமது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். எனவே, தோட்டத்துறையில் வீடமைப்பு அபிவிருத ;திக்காக அடுத்த மூன்று (03) வருடத்திற்குள் ரூபா 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.