ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் செம்மஞ்சள் நிற ஒளி விளக்கேற்றி ஒளிர விடப்பட்டது

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் செம்மஞ்சள் நிற ஒளி விளக்கேற்றி ஒளிர விடப்பட்டது
ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் செம்மஞ்சள் நிற ஒளி விளக்கேற்றி ஒளிர விடப்பட்டது.
 
16 நாட்களைக் கொண்ட செயற்பாடுகள்
 
"பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் செம்மஞ்சள் நிறத்தை அழகு செய்வோம்"
 
(ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திற்கு அமைவாக)
 
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் ஜலனி பிரேமதாஸ ஆகியோரின் பங்கேற்புடன் கடந்த மாதம் 27ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் ஆரம்ப விழா இடம்பெற்றது.
 
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய ரீதியிலான கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
 
இதன் ஒரு நிகழ்வாக ஐக்கிய பெண்கள் பெண்கள் சக்தியினால், ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று (04) செம்மஞ்சள் நிற ஒளி விளக்கேற்றி ஒளிர விடப்பட்டது.
 
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகனேசன், வடிவேல் சுரேஷ், வேலு குமார் மற்றும் வெள்ளவத்தை மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர் சுதர்சினி கிலர்பதி, ஐக்கிய பெண்கள் சக்தியின் தலைவர் உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
 
#16Days #LetsEndFemicide #RatifyILO190 #30YearsOfActivism #16DaysCampaign #RatifyILO190 #women #SJB 
 
264232910_10159469381914985_6804656993240617997_n.jpg
 
263756898_455316795953424_1839597244161708492_n.jpg
 
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image