போதனா ஆசிரியர் டிப்ளோமாவை பூர்த்தி செய்தோருக்கு என்று நியமனம்?

போதனா ஆசிரியர் டிப்ளோமாவை பூர்த்தி செய்தோருக்கு என்று நியமனம்?

போதனா ஆசிரியர் டிப்ளோமாவை பூர்த்தி செய்த 4000 பேருக்கு உடனடியாக நியமனம் வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

2015ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் தோற்றி சித்தி பெற்று கல்வியியற் கல்லூரிகளில் 2017/2019 கல்வியாண்டில் போதானா ஆசிரியர் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்து இறுதி பரீட்சை நிறைவு செய்து பெறுபேறுகள் வந்த நிலையில் அவர்களுக்கான நியமனம் வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு கல்வியமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு உயர்தரக் கல்வியை பூர்த்த செய்துள்ள குறித்த டிப்ளோமாதாரிகள் ஏற்கனவே 7 வருடங்கள் கழிந்து போயுள்ளன. இன்னும் அவர்களுக்கு நியமனம் வழங்குவதில் தாமதமேற்படல் மற்றும் நாட்டில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றை கருத்திற்கொண்டு நியமனம் வழங்குவதற்கான திட்டமொன்றை வகுப்பது கல்வியமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் கடமையாகும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image