மேன்முறையீட்டு கடிதத்துடன் வருமாறு பட்டதாரிகளுக்கு அழைப்பு

மேன்முறையீட்டு கடிதத்துடன் வருமாறு பட்டதாரிகளுக்கு அழைப்பு

இதுவரை பட்டதாரி பயிலுநர் திட்டத்தில் உள்வாங்கப்படாத பட்டதாரிகள் தொடர்பில் பொது நிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபை அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தவுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிய மத்திய நிலையம் மற்றும் பட்டதாரிகள் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை, 22ம் திகதி காலை 9.30 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

குறிப்பாக 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதியன்று பட்டதாரி சான்றிதழ் பெற்றும் பட்டதாரி பயிலுநர் சேவைக்கு உள்வாங்கப்படாது அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகள் குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சார்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிய மத்திய நிலையத்தின் அழைப்பாளர் மகேஷ் அம்பேபிட்டிய மற்றும் பட்டதாரிகள் மத்திய நிலையத்தின் அழைப்பாளர் சந்தன சூரியாராய்ச்சி உட்பட பிரதிநிதிகள் அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் அமைச்சின் செயலாளர் பெயருக்கு எழுதப்பட்ட மேன்முறையீட்டு கடிதமொன்றையும் எடுத்துக்கொண்டு காலை 9.30 மணிக்கு அமைச்சிற்கருகில் வருமாறு அழைக்கப்படுகிறீர்கள்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image