பயிலுநர் பட்டதாரிகள் சேவையிடங்களை நிராகரித்தால் வாய்ப்பை இழக்கும் சாத்தியம்

பயிலுநர் பட்டதாரிகள் சேவையிடங்களை நிராகரித்தால் வாய்ப்பை இழக்கும் சாத்தியம்

பட்டதாரி பயிலுநர்களை தற்காலிக சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் கவனத்திற்கொள்ள விடயங்கள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்ஜே.ஜே. ரத்னசிறி அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

பெப்ரவரி 2, 2021 என்று திகதியிடப்பட்டுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, போது அவர்களுடைய பட்டப்படிப்பு மற்றும் விருப்ப விடயங்களை கவனத்திற்கொள்ளவேண்டும். எனினும் அரச நிறுவனங்களின் தேவை மற்றும் அத்தியவசிய தேவை என்பவற்றை கருத்திற்கொண்டு சேவையில் இணைக்கும் போது மேற்படி விடயத்தை ஒரு தடையாக பார்க்க வேண்டாம். உங்கள் விருப்பப்படி சேவையில் இணையுங்கள்.

பட்டதாரி பயிலுநர்களை அவரவர் பதிவுள்ள சொந்த இடங்களில் பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள அரச நிறுவனங்களில் வெற்றிடங்கள் இல்லாவிடின் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தி சென்று கடமையாற்றக்கூடிய தேவையுள்ள மாவட்ட எல்லைக்குள் உள்ள அரச நிறுவனங்களில் சேவையில் இணைக்கவும்.

குறிப்பாக அப்பட்டதாரி பயிலுநர்களை சேவையில் இணைக்கும் நடவடிக்கையின் போது கொழும்பு மாவட்டத்தில் உள்ள அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரை அரச நிறுவனங்களுக்கு தேவையான ஆளணியை வழங்குவது குறித்து கவனம் செலுத்தவும். அவ்வாறு வழங்கப்படும் நியமனத்தை குறித்த பட்டதாரி தொடர்ச்சியாக நிராகரிப்பாராயின் அவருடைய பயிற்சியை நிறைவு செய்வதற்கான முன்மொழிவு கடிதத்தை எனக்கு அனுப்பி வைக்கவும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

123

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image