இலங்கை எழுத்தாளரின் நாவல் புக்கர் பரிசு 2022 தெரிவுப்பட்டியலுக்கு

இலங்கை எழுத்தாளரின் நாவல் புக்கர் பரிசு 2022 தெரிவுப்பட்டியலுக்கு

இலங்கை எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலக்க எழுதிய Seven Wanders of Maali Almeida நாவல் புக்கர் பரிசு 2022 தெரிவுப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

அவருடைய முதலாவது நாவலுக்கு 2011ம் ஆண்டு கொமன்வெல்த் பரிசு கிடைத்ததையடுத்து எழுத்துலகில் அவர் மிக பிரபலம் பெற்றார்.

புகழ்பெற்ற நாவலாசிரியரான ஷெஹான் கருணாதிலக்க ராக் பாடல்கள், திரைக்கதைகள் மற்றும் பயணக் கட்டுரைகள் எழுதுவதிலும் பிரபலம் பெற்றுள்ளார். GQ மற்றும் National Geographic ஆகிய சஞ்சிகைகள் அவை இடம்பெற்றுள்ளன.

காலியை பிறப்பிடமாக கொண்ட ஷெஹான் கருணாதிலக்க கொழும்பில் வளர்ந்ததுடன் உயர்கல்வியை நியுசிலாந்திலும் தொடர்ந்துள்ளார். பின்னர் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த அவர் லண்டன், நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டெர்டாம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

தற்போது இலங்கையில் வசிக்கும் அவர் நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பிறகு வௌியிட்ட நாவலே The Seven Moons of Maali Almeida ஆகும்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image
© 2024 Wedabima.lk. All Rights Reserved
Design by Vishmitha.com