வெளிநாட்டில் தொழில்புரிபவர்களின் பிள்ளைகள் கற்கின்ற பாடசாலைகளுக்கு Smart Board

வெளிநாட்டில் தொழில்புரிபவர்களின் பிள்ளைகள் கற்கின்ற பாடசாலைகளுக்கு Smart Board
வெளிநாட்டில் தொழில்புரியும் குடும்பத்தினரின் பிள்ளைகள் கற்கின்ற பாடசாலைகளுக்கு 13 மில்லியன் பெறுமதியான Smart Board வழங்கும் நிகழ்வு அமைச்சின் தலைமையில் நடைபெற்றது

 அநுராதபுர மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் வெளிநாட்டு தொழிலாளிகளின் பிள்ளைகள் கற்கின்ற 22 பாடசாலைகளுக்கு Smart Board அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன .

அனுராதபுர சல்காத்து மைதானத்தில் நடைபெற்ற "இலங்கையை வெற்றி கொள்வோம்" நிகழ்வுடன் இணைந்ததாக சகல பாடசாலைகளிலும் நவீன வகுப்பறைகளை அமைக்கும் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டன.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) இப் பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் Smart Board பயன்படுத்துவது தொடர்பாக விசேட பயிற்சிகளை வழங்கியது.

Smard Class Room உருவாக்குவதன் மூலம் மாணவர்களால் நவீன உலகத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image