சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 54 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 54 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 54 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் நேற்று (27) காலை கடற்படை மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 54 பேர் கொண்ட மீன்பிடி படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை கப்பல் ரத்னதீப நேற்று காலை மட்டக்களப்புக்கு கிழக்கு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான இலங்கையின் பல நாள் மீன்பிடி படகொன்றை அவதானித்து சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் (05) உட்பட 52 ஆண்களும் 2 பெண்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 19 மற்றும் 53 வயதுடைய மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இத்தகைய சட்டவிரோத குடியேறிகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆதரவளிப்பதில்லை. எனவே, அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக இந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கில் பொய்யான தகவல்களைக் கொண்டு கடத்தல்காரர்களால் நடத்தப்படும் மனித கடத்தலில் சிக்கி, சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்து, சட்டத்தின் முன் சிக்குவதைத் தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கின்றது. இவ்வாறான பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ள முயற்சிப்பதன் மூலம் பொதுமக்களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்படும் என கடற்படை மேலும் எச்சரிக்கிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image