30 இற்கு மேற்பட்டோரிடம் வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மோசடி

30 இற்கு மேற்பட்டோரிடம் வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மோசடி
ருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து இரண்டரை கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை
மோசடி செய்த தம்பதியினர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
மாதம்பை - இரட்டைக்குளம் பகுதியில் குத்தகைக்கு தங்கியிருந்த குறித்த தம்பதியினர், தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் குருணாகல் பகுதியிலுள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றில் பகுதி நேரமாக கடமையாற்றுவதாக தெரிவித்து அவர்கள் இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

சிலாபம், கற்பிட்டி, புத்தளம், ஆராச்சிகட்டுவ, மாரவில, நீர்கொழும்பு மற்றும் அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 30  இற்கும் மேற்பட்டோரிடம் இருந்து அவர்கள் பணத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image