மேலும், கொரியாவில் 04 வருடங்களும் 10 மாதங்களும் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து மீண்டும் இலங்கைக்கு வந்து, முன்னர் பணிபுரிந்த நிறுவனத்தில் சேவை ஒப்பந்தத்தைப் பெற்று கொரியாவில் பணிபுரிவதற்காக 299 பேர் சென்றுள்ளனர்.
அத்துடன், கணினி தொடர்பான பரீட்சையில் சித்தியடைந்து 195 பேர் தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர்.
இதேவேளை, ஜனவரி மாதம் முதல் இதுவரை கொரியாவில் வேலைவாய்ப்புக்காக சென்ற தொழிலாளர்களில் அதிகமானோர் (676 பேர்) ஜூன் மாதத்தில் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரிய வேலைவாய்ப்புளுக்கு அதிகமான இலங்கை தொழிலாளர்களை கொரியாவுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கொரிய மனிதவள திணைக்களம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் பலனாக, வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் மேலும் அதிகரித்து வருகின்றன.
இதேவேளை, கொரிய வேலை வாய்ப்புக்காக புறப்படும் 723 ஆவது குழுவினர் நேற்று முன்தினம் (05) இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர். 34 பேர் கொண்ட குழு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சொந்தமான UL 308 விமானமானத்தில் பயணித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட 164 பேர் கொண்ட குழுவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்க்கு சொந்தமான UL 470 விமானமானத்தில் சென்றுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம்