வெளிநாடு செல்ல எதிர்பார்ப்போருக்கு வெளிவிவகார அமைச்சரின் அறிவுறுத்தல்
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் போது அவர்களை மீட்க அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்வதாயின் திறந்த விசா அல்லது சுற்றுலா விசா மூலம் வெளிநாடு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடமும் இளைஞர்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
உரிய நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டு உடன்படிக்கை ஒன்றை கையொப்பமிட்டு அது தொடர்பில் பணியகத்திற்கு அறியப்படுத்தி உத்தியோபூர்வ மார்க்கம் ஊடாக செல்லுங்கள். இல்லாவிட்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எவ்வாறு இருப்பினும் இலங்கையர் என்ற வகையில் உங்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. ஆனால் நீங்கள் இவ்வாறாக சென்று பிரச்சனையில் சிக்கிக்கொண்டால் எம்மால் செய்யக் கூடிய நடவடிக்கை மிகவும் குறைவானதாகும் - என்றார்.