தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM - UN Migration) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த நடமாடும் சேவை நிகழ்வு நேற்று முன்தினம் (09) காலி வித்யாலோக வித்தியாலயத்தில் நடைபெற்றது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற இந்த நடமாடும் சேவை நிகழ்வில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து இலங்கைக்கு வந்தவர்கள் தற்போது மேற்கொண்டுவரும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்க நடவடிக்கை மேறகொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் தற்போது தொழில் செய்து வருபவர்கள் தொழில் முயற்சிகளில் ஈடுபட விரும்புபவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொழில்கள் மற்றும் தொழில்களை தொடங்குவதற்கு தேவையான திறன்களை மேம்படுத்துதல், வணிகத் திட்டங்களைத் தயாரித்தல்,
நிதி நிர்வாகத்திற்கான ஆலோசனைகளை வழங்குதல், சந்தை சிக்கல்கள் குறித்து ஆலோசனை, சர்வதேச சந்தையில் நிலவும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
விசேடமாக சுயதொழிலை ஆரம்பிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து ஒரு இலட்சம் ரூபா வரை (100,000.00) நிதியல்லாத உதவிகளைப் பெறுவதற்குமான வழிகாட்டல் வழங்கப்பட்டது.