காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் வௌியேற விசேட அனுமதி!

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் வௌியேற விசேட அனுமதி!

காஸா பகுதியில் சிக்கியிருந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக  வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துவௌியிட்ட அவர், தூதரகம் ஊடாக இது குறித்து அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதன்படி, இந்தக் குழுவைச் சேர்ந்த 17 பேரில் 15 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் எகிப்தை அடைய உள்ளனர். ஏனைய இருவர் பலஸ்தீன பிரஜைகள் என்பதால், அவர்கள் பெரும்பாலும் அங்கி தங்கி இருக்கக்கூடும்.

இதற்குத் தேவையான பணிகளை எகிப்து தூதரகமும், பாலஸ்தீனத்திலுள்ள பிரதிநிதி அலுவலகமும் செய்து வருகின்றன. அதன்படி அவர்கள் பாதுகாப்பாக எகிப்தை அடையப் போகிறார்கள் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image