ஓமான் ஆட்கடத்தல் தொடர்பில் மேலும் இருவர் கைது

ஓமான் ஆட்கடத்தல் தொடர்பில் மேலும் இருவர் கைது

ஓமானுக்கு மனித கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பதுளை - பல்லேகட்டுவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர், கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டதாகவும், மற்றுமொரு சந்தேகநபர் குருநாகல் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

 

அவர்கள் இருவரும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image