புலம்பெயர் பணியாளர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம்

புலம்பெயர் பணியாளர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம்

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களினால் வங்கிகள் ஊடாக அனுப்பப்படும் சட்டரீதியான பணவனுப்பல்களுக்காக வழங்கப்படும் மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர வேலைத்திட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதலாவது மின்சார வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று வழங்கி வைத்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை தவிர்ப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தநிலையில், வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை இலக்கு வைத்து சட்டவிரோத உண்டியல் முறைமை ஊடான பணம் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்திருந்தன.

எனவே, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வங்கிகள் ஊடாக வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு சட்டரீதியாக அனுப்பு பணத் தொகைக்கு ஏற்ப மின்சார வாகன இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image