வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு எங்கு பதிவு செய்யலாம்? பணியகத்தின் அறிவித்தல்

 வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு எங்கு பதிவு செய்யலாம்? பணியகத்தின் அறிவித்தல்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ள நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக எங்கு பதிவுகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பான அறிவித்தலை பணியகம் வெளியிட்டுள்ளது.

பெண் பணியாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதை அடுத்து, பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணயகத்தின் பிரதான காரியாலயம் நாளையும், நாளை மறுதினமும் மூடப்படவுள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் பணியகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனினும், பிரதான காரியாலயத்தின் முதலாவது மற்றும் இறுதி அனுமதியை பெறும் பிரிவு மற்றும் கொரிய வேலைவாய்ப்பு பிரிவின் நடவடிக்கைகளும் மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினருடன் முன்னெத்துச்செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தலாஹேன காரியாலயம் மற்றும் பிரதேச காரியாலங்களின் சேவைகள் வழமை போன்று இடம்பெறவுள்ளன.

விமான நிலையத்தின் கிளை சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால், வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்யும் நடவடிக்கையினை அதன் ஊடாக மேற்கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts