இலங்கை வெளிநாட்டு சேவை சங்கத்தினர் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு

இலங்கை வெளிநாட்டு சேவை சங்கத்தினர் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு

இலங்கை வெளிநாட்டு சேவை சங்கத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகப் பொறுப்பாளர்கள் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை வெளிநாட்டு அமைச்சிலுள்ள அமைச்சரின் பணியகத்தில் வைத்து சந்தித்தனர்.

கடந்த முதலாம் திகதி இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இலங்கை வெளிநாட்டு சேவை சங்கத்தினால் பங்களிக்கக்கூடிய வழிகள் மற்றும் இலங்கை வெளிநாட்டு சேவை அதிகாரிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டன.

இலங்கை வெளிநாட்டு சேவை சங்கத்தின் அலுவலர்களை அமைச்சருக்கு அறிமுகப்படுத்திய சங்கத்தின் தலைவர் விஸ்வநாத் அப்போன்சு, நாட்டின் அபிவிருத்திக்காக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் ஆதரவைக் கோரும் முகமாக, அவர்களிடையே நல்லெண்ணத்தை உருவாக்கும் சூழலில் வெளிநாட்டு சேவை தீவிரமாக ஈடுபடக்கூடிய முக்கிய பகுதிகளை எடுத்துரைத்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, புதிய அலுவலகப் பொறுப்பாளர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அதேவேளையில், நாட்டின் பிம்பத்தை வெளிநாடுகளில் காண்பிப்பதற்காக இலங்கை வெளிநாட்டு சேவையின் உறுப்பினர்கள் அளித்த மகத்தான பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார்.

இலங்கை வெளிநாட்டு சேவையின் உறுப்பினர்களுக்கு சுய அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் அரசாங்க அபிவிருத்திக் கொள்கையுடன் இணைந்த இராஜதந்திர சேவையின் பங்களிப்பு எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப இலங்கை வெளிநாட்டு சேவையின் அதிகாரிகள் எதிர்கொள்ளும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முழுமையான அணுகுமுறையைப் பெற்றுக் கொள்வதற்கான தனது உத்தரவாதத்தையும் இலங்கை வெளிநாட்டு சேவை சங்கத்திற்கு அமைச்சர் குணவர்தன வழங்கினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image