புலம்பெயர் தொழிலாளரை நாட்டுக்கு அழைக்க அனைத்த நடவடிக்கைகளும் முன்னெடுப்பு

புலம்பெயர் தொழிலாளரை நாட்டுக்கு அழைக்க அனைத்த நடவடிக்கைகளும் முன்னெடுப்பு

வௌிநாடுகளில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (02) தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்த வௌிநாடு சென்றுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விமான டிக்கட்டுக்களை பெற வசதியின்றி இருப்பின் அது தொடர்பில் ஆராய்ந்து பணியத்தின் தலையீட்டுடன் விமான டிக்கட்டுக்களை பெற்றுதர நடவடிக்கை எடுக்குமாறு அறித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வௌிநாடுகளில் பணியாற்றி வரும் நிலையில் நாடு திரும்ப முடியாது தவிக்கும் அனைவருக்கும் விமான டிக்கட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணியகத்திற்கு அறிவித்துள்ளேன். அத்துடன் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விமானங்களை ஏற்பாடு செய்ய எம்மால் முடியும். டிக்கட்டுக்களையும் வழங்க முடியும். எனினும் ஒரு நாளைக்கு ஆயிரம் பேரை அழைத்து வந்தால் அவர்களை தனிமைப்படுத்த எம்மிடம் வசதியுள்ளதா? எனவே தனிமைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்தவும் உதவி வழங்குமாறு கேட்டியுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image