வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி 16 இலட்சம் ரூபா பண மோசடி

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி 16 இலட்சம் ரூபா பண மோசடி

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக கூறி 16 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பாணந்துறையில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவராவார்.

குளியாப்பிட்டி குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தருவதாக கூறி 16 இலட்சத்து 19 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டி குற்றப் புலனாய்வு பிரிவினர மேற்கொண்டு வருகின்றனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image